2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம், யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் ஞானம்ஸ் ஹோட்டலில் நடத்திய யாழ்ப்பாணம் சிறிய மற்றும் மத்தியதர வர்த்தக நிறுவனங்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத் தலைவர் எஸ்.பூரணச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்; யாழ்ப்பாணத்தில் சிறியளவிலான மற்றும் மத்தியளவு தொழில் முயற்சியாளர்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கொழும்பில் இருந்து வருகை தந்த தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் பிரதிப் பணிப்பாளர் கனிஷ்ட விஜயசிங்க, ஊடக இணைப்பாளர் தனிகா வர்ணகுலசூரிய, உதவிப் பணிப்பாளர் டித்தா டி அலெய்ஸ், மாற்றுவலுவுள்ளவர்களுக்கான  பயிற்சி அலுவலர் மேசி குணரத்தின கருத்துக்களை வழங்கினர்.

இதேவேளை இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம், யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்துடன் இனைந்து யாழ்ப்பாணம் ஞானம்ஸ் ஹோட்டலில்  பார்வைக் குறைபாடுடையவர்களுக்காக வவுனியாவில் நடத்திய தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிநெறியை நிறைசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்ககப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .