2025 ஜூன் 21, சனிக்கிழமை

சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர்   யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .