2025 ஜூன் 21, சனிக்கிழமை

முன்னாள் காதலனும் அவரது மனைவியும் அச்சுறுத்துவதாக பெண் முறைப்பாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தன்னை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பணம் பெற்றுவருவதாக பெண்ணொருவர் தனது முன்னாள் காதலன் மீதும் அவரது மனைவி மீதும் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்திலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனும், யுவதியும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் காதலன் வேறு ஒரு பெண்ணையும், காதலி வேறு ஒரு ஆணையும் திருமணம் முடித்துக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு இருவரும் வேறு திருமணம் முடித்த பின்னர் அந்த பெண்ணின்  முன்னாள் காதலனும், அவரது மனைவியும் சேர்ந்து குறித்த பெண்ணை அச்சுறுத்தி வந்துள்ளனர்.

எனது கணவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பேஸ் புக்கில் வெளியிடுவோம் என்று முன்னாள் காதலனின் மனைவியும் இது தொடர்பில் உனது கணவனுக்கும் தெரியப்படுத்துவோம் என்று அவளது முன்னாள் காதலனும் அந்த பெண்ணை  அச்சுறுத்தி பெரும் தொகையான பணத்தினை அவளிடமிருந்து இருவரும் பெற்று வந்துள்ளனர்.

இவ்வாறு பல தடவைகள் குறித்த பெண் பணத்தினை கையளித்து வந்த நிலையில், முன்னாள் காதலனும் அவரது மனைவியின் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே சென்றுள்ளது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞனையும் அவரது மனைவியையும்  யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த யாழ். பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

குறித்த இளைஞர் பல பெண்களை காதலித்து, அவர்களை ஏமாற்றி வந்ததுடன், அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளதாகவும், பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .