2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஐ.ம.சு.கூ தேர்தல் பிரசாரம் யாழில் ஆரம்பம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று காலை 11.00 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் பிரசார நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந்த தேர்தல் பிரசார ஆரம்ப கலந்துரையாடலில், நடைபெறவுள்ள வடமாகாண சபை வேட்பாளர்களான சின்னத்துரை தவராஜா, அங்கஜன் இராமநாதன், முடியப்பு ரெமீடியஸ், சர்வானந்தன், கந்தசாமி கமலேந்திரன் (கமல்), நடராசா தமிழ் அழகன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா  உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஆதனைத் தொடர்ந்து, யாழ். 2 ஆம் குறுக்குத் தெருவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்திற்கான புதிய அலுவலகத்தினையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .