2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஐ.தே.க முதன்மை வேட்பாளர் தலைமையிலான குழு கனேடிய உயர் ஸ்தானிகருடன் சந்திப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி முதன்மை வேட்பாளர் தி. துவாரகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசகரான மேகன் பொஸ்ரா தலைமையிலான குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடக்கு தேர்தல் நிலவரம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பின்னரான காலத்தில் வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள்; குறித்து இங்கு கலந்துரையாடியதாகவும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதன் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .