2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான இடமாற்றம் இரத்து

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 91 வைத்தியர்களுக்கான இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவாந்தராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 91 வைத்தியர்களை இடமாற்றம் செய்யவுள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்திருந்தது.

மேலும், யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில், 91 வைத்தியர்களை திடீர்; இடமாற்றம் செய்யவுள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வைத்தியர்கள் திடீர் இடமாற்றத்திற்கு விருப்பம் தெரிவிக்காதிருந்த நிலையில், சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொண்டு வைத்தியர்களுக்கான திடீர் இடமாற்றத்தை இரத்துச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .