2025 ஜூன் 21, சனிக்கிழமை

அங்கஜன் ராமநாதனின் தந்தை கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண  சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தை ராமநாதன்  கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிஹேரா தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை இன்று புதன்கிழமை மாலைகைது செய்துள்ளதாகவும் அவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அவரிடம் இன்று புதன்கிழமை மேற்கொண்ட நீண்டநேர விசாரணைகளின் பின்னரே சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி:
அங்கஜனின் தந்தை கைது?

You May Also Like

  Comments - 0

  • Tamilmaaran Thursday, 29 August 2013 02:32 PM

    சொந்த சுய இலாபத்திக்காக பாதிப்புக்குள்ளான தன்இனத்துக்கே ஆயுதத்தைக் காண்பித்து எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார். 1994ஆம் ஆண்டு பொது தேர்தலின் இதே போன்று ஐக்கிய தேசிய கட்சிக்காக கல்கிசையில் துப்பாக்கியால் மிரட்டினார் (மக்கள் மறக்கவில்லை)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .