2025 ஜூன் 21, சனிக்கிழமை

அங்கஜனின் தந்தை வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்

14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண  சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .