2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பொதுநலவாயத்தில் முதலமைச்சர் பங்கேற்ககூடாது:த.தே.கூ.

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போதே, பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பதில்லையென்பதுடன் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • Karnan Saturday, 26 October 2013 06:16 AM

    மிக்க நல்லதோர் முடிவு.

    Reply : 0       0

    VALLARASU.COM Saturday, 26 October 2013 10:53 AM

    ஸபாஸ் சரியான தீர்மானம்... இப்படி தீர்மானம் எடுத்த பிறகு முகாவை போல பின் பக்கம் வாங்கி விட்டு வெளிநாடு போக வேண்டாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .