2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யாழ். பிறவுண் வீதி வீட்டில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பிறவுண் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகளும் பணமும் பொருட்களும்  கொள்ளையிடப்பட்டுள்ளன.

மேற்படி வீட்டின் உரிமையாளர்கள் நேற்று சனிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றபோதே மேற்படி வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வீட்டிலிருந்த தங்கநகைகள், பணம்,  கமெராக்கள் உள்ளிட்ட 8 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியானவை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.

வெளியில் சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதைக்  கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்படி கொள்ளைச்; சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .