2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த அறுவர் மீது வாள்வெட்டு

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

இதனால் படுகாயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலரே வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எஸ்.சிவஞானமூர்த்தி (57), சி.தவனேஸ்வரி (45), சி.கிருஸ்ணகுமார் (23), திலக்ஷன் (15) மற்றும் என்.அன்னம்மா (74) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X