2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தேவாலயத்திற்கு கல்லெறிந்தவர் பிணையில் விடுதலை

Super User   / 2013 நவம்பர் 06 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். புன்னாலை கட்டுவான் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கல்லெறிந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் ஒயில் ஊற்றி கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் தேவாலயத்தின் 26 யன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை அப்பகுதி இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த நபரை ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்றம் அனுதித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .