2025 மே 19, திங்கட்கிழமை

2014ஆம் ஆண்டு க.பொ.த. சா/த, உ/த பரீட்சைகளில் கொரியமொழி அறிமுகம்

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எஸ்.கே.பிரசாத்)

'எதிர்வரும் 2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர,  உயர்தர பரீட்சைகளில் கொரிய மொழி அறிமுகம் செய்துவைக்கப்டவுள்ளது. அண்மையில் நடைபெற்ற கொரிய தொழில் வாய்புப் பெறும் நேர்முகத் தேர்வில் பலர் மொழிப்பிரச்சனை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்திருக்கின்றார்கள். இதற்காக கொரிய நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களை கொரிய அரசாங்கம் நியமித்துள்ளது. இவர்கள் கல்வியல் கல்லூரிகளில் கடமையாற்ற இருக்கின்றார்கள்' என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இசுரு திட்டத்தின் கீழ் யாழில் புனரமைப்புச் செய்யப்பட்ட பாடசாலைகளின் கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யாழ்.மாவட்டத்தின் கல்வியின் சிறப்புப் பற்றி சிறுவயது முதல் நான் அறிந்திருக்கின்றேன். இன்று தென்னிலங்கையில் பல்வேறு துறைகளில் நிபுணத்தவம் பெற்றிருப்பவர்களின் கல்விக்கு அடிப்படையாக அமைந்தது யாழ்பாணம்தான் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

முன்னாள் சபாநாயகராக இருந்த ரத்நாயக்க பருத்தித்துறை ஹட்லிக் கல்லூரியில் கல்வி கற்றிருக்கின்றார். முன்னைய காலத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் பகுதிக்கும் தமிழ் மாணவர்கள் சிங்களப் பகுதிகளுக்கும் சென்று இன, மத, மொழி பேதங்கள் இன்றி கல்வி கற்பதற்குரிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இதற்காக சர்வதேச மொழிகளை கற்றுக்கொள்ளவேண்டிய தேவை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உலகின் செல்வந்தர்களாக மாணவர்களை மாற்றவேண்டிய பொறுப்பு பாடசாலைகளுக்கு இருக்கின்றது. தொழில்நுட்ப அறிவினை வளர்ப்பதின் ஊடகாவும் மொழிப்புலமையை வளர்துக்கொள்வதின் ஊடாகவுமே உலகின் செல்வந்தர்களாக மாணவர்கள் சிறப்புப்பெற முடியும்.

தொடர்பாடல் தொடர்பான அறிவினை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும் நோக்கில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசியரியர்களுக்கு எந்த ஒரு அரசியல் காரணங்களுக்காகவும் இடமாற்றம் வழங்கப்டமாட்டது.

புத்தகப் பைகளுடன் மாணவாகள் பாடசாலைகளுக்கு வந்து கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் மாணவர்களை சயனைற் குப்பி அணியும் வாய்பை வழங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X