2025 ஜூன் 25, புதன்கிழமை

தம்புள்ளை மாநகர சபையினர் யாழ்.மாநகர சபைக்கு விஜயம்

Kogilavani   / 2014 ஜனவரி 14 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், எஸ்.ஜெகநாதன், சுமித்தி தங்கராசா


தம்புள்ளை மாநகர சபையின் முதல்வர் ஜலிய ஒபெத மற்றும் உறுப்பினர்கள் திங்கட்கிழமை (13) யாழ்.மாநகர சபைக்கு விஜயம் செய்து யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.

இதன்போது, யாழ்.மாநகர சபையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சோலைவரி மற்றும் வருமானச் சேகரிப்புப் பிரிவுகளின் புதிய கட்டடத்தொகுதிகளைப் பார்வையிட்டதுடன் நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் திட்டமிடற் பிரிவுக்கான கட்டடங்களையும் அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இச்சந்திப்பின் போது யாழ்.மாநகர சபையின் நடைமுறைகள் பற்றியும் இச்சபையால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் மற்றும் பல முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் இரு மாநகர சபையின் உறுப்பினர்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .