2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சென்.பற்றிக்ஸ் பழைய மாணவன் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு.

Super User   / 2014 மார்ச் 13 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். சென்.பற்றிக் கல்லூரியின் பழைய மாணவன் டாக்டர் லக்ஷ;மன் டேவிட், பிரிகேடியராகவிருந்து மேஜர் ஜெனராலாக பதவியுயர்வு பெற்றுள்ளார். அவரை கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தினால் கௌரவிப்பு நிகழ்வொன்று இன்று (13) நடத்தப்பட்டது.

கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய எம்.ஜெரோசெல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயப் பெரேராவும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது பாடசாலை அதிபரினால் டேவிட்டிற்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .