2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரு மில்லியன் போலி டொலர் தாளுடன் இருவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் ஒன்றில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் போலி தாளொன்றை வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்ட இருவரை கடந்த திங்கட்கிழமை (07) இரவு கைது செய்ததாக, யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் இம்மாதத்திற்கான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நல்லூர் மற்றும் குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த இருவர் விருந்தினர் விடுதியில் வைத்து டொலர் தாளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட டொலர் தாளினை, யாழ். நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுஇலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .