2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரு வருடத்திற்குப் பின் திருடன் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா, யோ.வித்தியா

யாழ். சாவகச்சேரி பகுதியில் 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபரை இம்மாதம் 3ஆம் திகதி கைது செய்ததாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தினால் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகத்தில் மாதத்திற்கான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 23,800 ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போயிருந்தன.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திருட்டினை மேற்கொண்ட நபர் முறிகண்டிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .