2025 ஜூலை 05, சனிக்கிழமை

வலி. கிழக்கில் வாழ்வாதாரத்துக்கான உதவித் திட்டங்கள் வழங்கல்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களது வாழ்வாதாரத்துக்கான உதவிப் பொருட்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (11) வழங்கி வைத்தார்.

வலி. கிழக்கு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழவில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் 20 பயனாளிகளுக்கு விதை வெங்காயம் மற்றும் கரட் விதை என்பன வழங்கப்பட்டுள்ளதுடன் 18 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் 2 பயனாளிகளுக்கு துணியைக் கொண்டமைந்த மூலப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதனிடையே 8 பயனாளிகளுக்கு மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கான நிதிகளும் வழங்கப்பட்டன. இதில் முதற்கட்டமாக 3 பயனாளிகளுக்கு தலா 15,000 ரூபாய் வழங்கப்பட்ட அதேவேளை, ஐந்து பேருக்கு இரண்டாம் கட்டமாக தலா 15,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவிப்பொருட்களை கிராமிய வருவாயும் சுற்று சூழல் அபிவிருத்திக்கான சேவைமன்றம் (friends) என்று அரசசார்பற்ற தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர்; குறித்த அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது என்பதுடன் நிறுவனத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுமட்டுமன்றி இவ்வாறான உதவிகள் எதிர்காலத்திலும் தொடரப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் எமது மக்கள் அவற்றை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, அவ் உதவிகளை உரிய முறையில் பயன்படுத்தி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது வலி. கிழக்கு பிரதேச செயலர் பிரதீபன், பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் உரையாற்றியதை அடுத்து பயனாளிகளுக்கான உதவு பொருட்களை அமைச்சர் வழங்கி வைத்தார்.

இதன்போது உதவிப் பிரதேச செயலர் பிறேமினி, வலி. கிழக்கு பிரதேச சபை எதிர்கட்சி உறுப்பினர் சந்திரபோஸ், கிராமிய வருவாயும் சுற்று சூழல் அபிவிருத்திக்கான சேவைமன்ற உதவியாளர் இராஜேஸ்வரி ஈ.பி.டி.பியின் வலி. கிழக்கு பிரதேச இணைப்பாளரும், வலி. கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஐங்கரன் ஆகியோர் கலந்துகொணடனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .