2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீனவர் போராட்டத்திற்கு த.தே.கூ ஆதரவு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.ஜெகநாதன்
 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாவை சேனாதிராசா வெள்ளிக்கிழமை (12) அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில கூறப்பட்டுள்ளதாவது;

தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் தேசியமீனவர் ஒத்துழைப்பு இயக்கம்  எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ். நகரில் மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் போராட்டமொன்றை நடத்துவது பற்றி எங்களுடன்  பேசியுள்ளனர். அப் போராட்டத்திற்கு நாம் ஆதரவு தெரிவித்திருந்தோம்.

இலங்கை அரசாங்கம், தனது இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை தங்கள் இராணுவத் தேவைகளுக்காகவும் சிங்களவர்களை குடியேற்றி தமிழ்மக்களின்  குடிப்பரம்பலைக் குலைத்துவிடவும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி வேலை செய்து வருகின்றது.

இதனால் வடக்குக் கிழக்குத்  தமிழ்ப் பிரதேசங்களிலும்  இந்தியாவிலும் அகதி முகாம்களில் அகதிகளாக எமது மக்கள் சீரழிகிறார்கள

அந்தமக்கள் வாழ்வாதாரமற்றவர்களாக, விவசாயம் செய்யமுடியாதவர்களாக, சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில்  ஈடுபடமுடியாதவர்களாக, குடியிருப்புக்கள் அற்றவர்களாக 25 ஆண்டுகளாக அடக்குமுறைக்கும், ஒடுக்கமுறைக்கும்   ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் தமிழின அழிப்பின் ஒரு அம்சமாகவே  இந் நடவடிக்கைகள்  இடம்பெற்று வருகின்றன.

இவற்றிற்கு எதிராகத் தென்னிலங்கை இயக்கங்களும் மக்களும் எம்மினத்தின்  ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட முன்வந்தமையை நாம்  வரவேற்கின்றோம்.

எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ் நகரில் மு.ப.10 மணிக்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்த ஐனநாயக போராட்டத்தில் நாமெல்லாம்  பங்குகொண்டு வெற்றிபெறச் செய்யவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்  என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .