2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்திய பிரஜை கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா

விசா முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவரை புதன்கிழமை (10) கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியா, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சுந்தரபாண்டியன் (வயது 36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இவர், யாழ்.நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் பணியாற்றுவதற்கான 2 வருட வேலை விசாவில் இலங்கை வந்திருந்தார்.

விசா காலத்தின் இடையில் விருந்தினர் விடுதியின் பணியிலிருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பில் விருந்தினர் விடுதி நிர்வாகத்திற்கு அறிவிக்காமலேயே அவர் வெளியேறி சென்றுள்ளார்.

இதனையடுத்து, இந்திய பிரஜையின் கடவுச்சீட்டு, விசா ஆகியவற்றை விடுதி உரிமையாளர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்திய பிரஜை தனது கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பெறும் நோக்குடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு புதன்கிழமை (10) சென்றுள்ளார்.

அவரின் விசா காலம் முடிவுற்று 2 மாதங்கள் ஆன நிலையில் இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .