2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வட்டுவாகலில் கெளுறு மீன்கள் கரையொதுங்குகின்றன

Gavitha   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


வட்டுவாகல் நந்திக்கடற்கரையில் கடந்த 2 நாட்களில் சுமார் 50 ஆயிரம் கிலோகிராம் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எஸ்.சுதாகரன் புதன்கிழமை (01) தெரிவித்தார்.

கரையொதுங்கிய மீன்களில் அதிகளவானவை கெளுரு வகை மீன்களே எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீன்கள் இறந்து கரையொதுங்கியதற்கான காரணத்தை கண்டறிய, நீரின் மாதிரி நாரா (NARA)நிறுவனத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தற்பொழுது நிலவும் உயர் வெப்பநிலையால் கடல் நீரின் உவர்த்தன்மை அதிகரிப்பு, கடல் நீர் நன்னீரோடு கலக்காமை மற்றும் ஒட்சிசனின் அளவு குறைந்தமையே இந்த மீன்களின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமன்றி, மழைவீழ்ச்சி இல்லாததால் தற்பொழுது நந்திக்கடல் கடல்நீரேரியுடன் கலக்கின்ற முகத்துவாரம் மூடப்பட்டுள்ளதாகவும் இதுவும் இந்த மீன்கள் இறந்து கரையொதுங்குவதற்கான காரணமாக இருக்கலாம்.

மீன்கள் தற்போதும் தொடர்ந்தும் கரையொதுங்கி வருவதாகவும், கரையொதுங்கும் மீன்களை கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உதவியுடன் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .