2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வலி.கிழக்கு பிரதேச சபை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி, வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை பணியாளர்கள் 10 பேர், திங்கட்கிழமை(06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுகாதார, பாதுகாப்பு மற்றும் நூலக மேற்பார்வை பணியாளர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட தாங்கள் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அமைய அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், தங்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கடந்த 2014ஆம் ஆண்டு உள்ளுராட்சி அமைச்சால் கூறப்பட்டபோதும், இதுவரையில் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென பணியாளர்கள் கூறினர். 

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அதிகாரத்தை பிரதேச சபை தவிசாளர் கொண்டிருந்த போதும் நிரந்தர நியமனம் வழங்காதிருப்பது தங்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பிரதேச சபையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபை என்பது குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X