2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'யாழ். நகர விளம்பர ஒலிபரப்பு சேவை உரிய முறையில் வழங்கப்படவேண்டும்'

Thipaan   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். நகரப் பகுதியில் நடைபெறும் விளம்பர ஒலிபரப்பு சேவை உரிய முறையில் கேள்வி அறிவித்தல் விடப்பட்டு நடைபெறுவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி கோரிக்கை முன்வைத்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.

யாழ். மாநகர சபையின் கீழுள்ள இந்த விளம்பர ஒலிபரப்பு சேவையானது, உரிய முறையில் கேள்வி அறிவித்தல் விடாமல் சீரான முறையில் நடைபெறவில்லையெனவும் அதற்கு சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென முதலமைச்சரிடம் உறுப்பினர் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பில் ஆராய்ந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுப்பார் என அவைத்தலைவர் கூறினார்.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள செல்லப்பா வீதியை செல்லப்பா சுவாமிகள் வீதியென பெயர் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவைத்தலைவர் கூறினார். 

மேற்படி வீதியானது தனியார் ஒருவரால் விட்டுக்கொடுக்கப்பட்ட வீதியாகவும் அவ்வீதி ஒழுங்குமுறையில் வீதியாக பதியப்படவில்லையென பரஞ்சோதி சபையில் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X