2025 ஜூலை 17, வியாழக்கிழமை

27 வருடங்களின் பின்னர் பேருந்து சேவை

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவை 27 ஆண்டுகளில் பின்னர் திங்கட்கிழமை (06) மீண்டும் ஆரம்பமாகியது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இந்தப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் பேருந்து சேவை யுத்தம் காரணமாக கடந்த 27 வருடங்களாக இடம்பெறாமல் இருந்தது. இந்த சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென பொதுமக்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கைக்கு அமைவாக யாழ். சாலையினருடன் அமைச்சர் கலந்துரையாடி, இந்த சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த ஆரம்ப நிகழ்வில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X