Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'வலிகாமம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவானது தற்போது குறைவடைந்து வருவதற்கான காரணத்தை கூறும்; வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை தூய நீருக்கான செயலணியின் அடுத்த கூட்டத்தில் வைத்து தெரிவிக்கப்படும்' என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.
இதன்போது, வடமாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான விளக்கத்தை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஐங்கரநேசன்,
வடமாகாண சபை நிபுணர் குழுவில் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் அடங்கலாக 9 பேர் உள்ளனர். இவர்கள், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நிபுணர் குழுவுக்கு ஆலோசனையாளர்களாக இருந்தனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், நிபுணர் குழுவால் பரிசோதனை செய்யப்பட்டு, அந்தக் கிணறுகளின் நீர் மாதிரிகளில் சர்வதேச அளவில் நீரில் இருக்கலாம் என்று கூறப்படும் எண்ணெயின் அளவைவிட 200 வீதம் குறைவாகவே காணப்படுகின்றது.
தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேசங்களில் எண்ணெய் கசிவு எனக்கூறப்பட்ட கிணறுகளின் நீர்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தெல்லிப்பளையில் எண்ணெய் கலப்பு இல்லையென்பதும், கோப்பாயில் பரிசோதனை செய்யப்பட்ட 20 கிணறுகளில் 15 கிணறுகளில் கலப்பு இல்லையென்பதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பார உலோகங்கள் இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மக்களை திசை திருப்பும் வகையில் நச்சு பதார்த்தங்கள் நீரில் உள்ளதாக கூறி சிலர் அரசியல் சுய இலாபங்களுக்காக செயற்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம். வடமாகாண சபை, அனர்த்த முகாமைத்துவ பிரிவு, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் பிரதேச சபைகள் இணைந்து குடிநீரை வழங்கிவருகின்றன' என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago