Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மாணவர்கள் தாங்கள் பிறந்த மண்ணைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசியரியர் எஸ்.சிவலிங்கராஜா, செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், முத்தமிழ் விழாவும் முன்னாள் அதிபர் சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நிகழ்வும் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வரும் தமிழ்ச்சங்க போசகருமான எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
மானிப்பாய் பிரதேசமும் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் பல பெருகைளைக் கொண்டுள்ளன. தமிழிலே வெளிவந்த முதல் அகராதி மானிப்பாய் அகராதி எனும் சிறப்புபை இந்த இடம் பெறுகின்றது. ஆரம்ப கால வைத்தியசாலையாக மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை விளங்குகின்றது.
1853ஆம் ஆண்டு கென்றி மாண்டின் என்பவர் முதன்முதலாக புகைப்படத்தை எடுத்தார். 2ஆவது புகைப்பட கலைஞனாக லோட்டன் விளங்குகின்றார். அவரது புதல்வர் நாடறிந்த நாடகக் கலைஞன் கலையரசு சொர்ணலிங்கம், இந்த பாடசாலையில் கல்வி கற்றவர்.
பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடுகின்ற போது மானிப்பாய் பிரதேசம் மதம் சார்ந்த வேறுபாடுகளை கொண்டமைந்த பிரதேசம் எனக்குறிப்பிடுகின்றார். முத்தழிழ் அறிஞர் சுவாமி விபுலானந்தர் தமிழ்த்துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பாற்றியவர். இந்த பாடசாலையின் அதிபராக இருந்து இந்த பாடசாலையை வழிநடத்திய பெருமை உடையதாக விளங்குகின்றது. அவரது பாதம்பட்ட மண்ணிலே அவர் அதிபராக இருந்து சேவை செய்த பாடசாலையில் கற்பிப்பதும் வேலை செய்வதும் பெருமைக்குரிய விடயமாகும் என்றார்.
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago