2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அதிக பிள்ளைகளை பெற்ற தாய்மார் கௌரவிக்கப்படவுள்ளனர்

George   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

10 பிள்ளைகளுக்கு மேல் பெற்ற 75 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், ஒக்டோபர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள சர்தேச முதியோர் தின நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனத்தொகைச் சுருக்கம் ஏற்பட்டுவரும் நிலையில் அதிக பிள்ளைகளைப் பெறும் தாய்மாரை ஊக்குவிக்கும் நோக்குடன் சமூக சேவைகள் அமைச்சினால் தாய்மாருக்கான கௌரவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதியோர் தினத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய விழாவில் இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் திட்டும் நடவடிக்கையை பிரதேச செயலகங்களிலுள்ள சமூக சேவைகள் அலுவலர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X