2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குளித்துக்கொண்டிருந்த பெண்ணின் நகைகள் அபகரிப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சாட்டிக் கடலில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணுடைய நகைகளை அபகரித்த சந்தேகநபரொருவரை அப்பகுதி மக்கள் பிடித்து வியாழக்கிழமை (09) தங்களிடம் ஒப்படைத்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சாட்டிக் கடலுக்குச் சென்று குளிப்பதற்கு கடலுக்கு இறங்கும் முன், தனது நகைகளை தனது உறவினரான வயோதிபரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதனை அருகில் இருந்து அவதானித்த இளைஞன் ஒருவன், நகையை முதியவரிடம் இருந்து அபகரித்துக்கொண்டு ஓடவே, அங்கு நின்ற பொதுமக்கள் இளைஞனை பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X