Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப் பங்களிப்புடன் ஊர்காவற்துறை தம்பாட்டியில் 23 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நண்டு பதனிடும் தொழிற்சாலை, புதன்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது. தொழிற்சாலையை தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் நிர்வகிக்கவுள்ளது.
சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உரிய பதனிடும் வசதி இல்லாததால் குடாநாட்டில் பிடிக்கப்படும் நண்டுகள் உள்ளூர் மக்களினாலேயே நுகரப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்த நண்டு பதனிடும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
தீவகக் கடற்பரப்புகளில் மாத்திரம் அல்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிடிக்கப்படும் நண்டுகளையும் தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்து, இத்தொழிற்சாலையில் பதனிடவுள்ளது. இதன் பின்னர் பதனிடப்பட்ட நண்டுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு தகரக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
நண்டு ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவதோடு, தம்பாட்டி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் இத்தொழிற்சாலை வழங்க உள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
நவீன வசிதிகளுடன் கூடிய இந்த நண்டு பதனிடும் தொழிற்சாலையை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரற் லோஹீன், ஐக்கியநாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயர் நிர்வாக அதிகாரியுமான ஹோலியாங் சூ, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினை நந்தி மற்றும் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த தொழிற்சாலை அமைந்துள்ள 7 பரப்புக் காணியை, அமரர் பொன்னுச்சாமி குமாரசாமி என்பவரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறவினர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago