Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மஹிந்த ராஜபக்ஷபவை தோற்கடித்தனர். மீண்டும் அவருடைய நிழல் உருவம் தோன்ற ஆரம்பித்துள்ளது. மக்களினால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மக்களுடைய எதிர்பார்ப்பான விடுதலை, சமாதானம், அமைதி என்பன நல்லாட்சியில் ஏற்படுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னனியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட மக்கள் தொடர்பாடல் அலுவலகம் வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
மக்கள் விடுதலை முன்னனியின் அலுவலம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுவதற்கு காரணம் மக்களுடைய வேண்டுதலாகும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை மக்கள் விடுதலை முன்னணியின் மூலம் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற போக்கு காணப்படுகின்றது. எமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை இந்த பகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
இந்த பகுதியில் வாழும் மக்களிடம் வந்து, எமது கருத்துக்களை கூறக்கூடிய சூழ்நிலை கடந்த காலம் முழுவதும் காணப்படவில்லை. இந்த நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. விசேடமாக யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிவுக்கு வந்தன் பின்னர், சமாதானம், அமைதி இருக்கின்ற சகவாழ்வு எற்பட்டு நல்லதொரு வாழ்க்கை கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
இந்த நாட்டை ஆண்ட மஹிந்த அரசு மக்களை சிந்திக்கவிடவில்லை. மக்கள் மீது அராஜகத்தையும், இராணுவ ஒடுக்குமுறைகளையும் உளவுப்படைகளின் தேடுதல் நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்து விட்டார்கள். 2010ஆம் ஆண்டின் பின்னர் மக்களிடம் பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டன. மக்கள் பாரிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகினார்கள். இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதனால் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோற்கடிக்கப்பட்டார். மைத்திரி ஆட்சிக்கு வந்தார்.
இவர் வந்த பின்னர் தமக்கு கடந்த காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகள் மீளக்கிடைக்க வேண்டும், பறிக்கப்பட்ட காணிகள் கிடைக்க வேண்டும், கடத்தப்பட்டவர்களும் மற்றும் காணாமல்போனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு வாழ்வு கிடைக்கும், தாய் தந்தையார்களை இழந்த பிள்ளைகளுக்கு வாழ்வு கிடைக்கும், கணவர்மார்களை இழந்த பெண்களின் வாழ்க்கை சிறக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். இவற்றில் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் வடபகுதியில் வாழும் தமிழ்மக்கள் கவனம் செலுத்துவதில்லை. சிங்களவன் ஆட்சி செய்கின்றான், இதனால் எமக்கு எதுவும் கிடைக்காது என்ற மன நிலையில் தேர்தலை கைவிட்டு இருந்தார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முழு நாட்டு மக்களும் மத, இன, மொழி என எந்தவகையான வேறுபாடுகளுமின்றி மஹிந்தவின் சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் வாக்களித்தனர்.
மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்கு மாறாக மந்திரி பதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் மைத்திரிக்கு எதிராக செயற்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான் செயற்பட்டார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின் போது முழு சுதந்திரக் கட்சியினருமே மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக செயற்பட்டனர். இன்று சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனா காணப்படுகின்றார். ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக மைத்திரிபால சிறிசேனா காணப்படுகின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் நலன்களை பாதுகாக்கப் பார்க்கிறாரே அன்றி, தன்னை தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களின் நலனில், அவர்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பவித்ரா வன்னியாராச்சி, கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றி பெற போகின்றார், மைத்திரி தோற்கடிக்கப்பட போகின்றார் என தனது வீட்டையே பந்தயம் பிடித்தவருக்கும் கூட அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்களை அவமானப்படுத்திய சந்திரிகா அம்மையாரை நிர்வாணமாக்கி தோலுரித்துக் காட்டுவேன் என்ற கூறிய திசநாயக்கா இன்று அமைச்சர் பதவியில் இருக்கின்றார்.
மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி உருவாகவில்லை. மக்கள் எதிர்பார்த்த லஞ்ச, ஊழல் மோசடி முடிவடையவில்லை. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவைகள் சம்பந்தமாக ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை கூறவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago