Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமராட்சி கிழக்கு பத்திராயன் மீனவர் சங்கத்தினர், தங்களுடைய மீன்பிடிக்கு தேவையான வலையை விடுத்து அளவில் மாற்றமுள்ள வலையை தந்ததாக கூறி, யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (10) முரண்பட்டனர்.
மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. மீனவர்களுக்கு எவ்வாறான உபகரணங்கள் வேண்டும் என்ற தகவல்கள் பெறப்பட்டு, அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஜி.பி.எஸ் உபகரணம், ஐஸ்பெட்டிகள், வலைகள், படகு இயந்திரங்கள் என்பன இவ்வாறு வழங்கப்பட்டன. பத்திராயன் மீனவர் சங்கத்தினரின் ஆழ்கடல் மீன்பிடியை செய்வதற்கு 1500 அடி நீளமும் 330 அடி அகலமும் கொண்ட மீன்பிடி வலைகள் தேவைப்படுகின்றது. எனினும் தங்களுக்கு 3,000 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வலைகள் வெட்டித் தைக்க வேண்டும் எனவும், தரப்பட்ட வலைகளின் அகலமும் அரைவாசியிலும் குறைவாகக் காணப்படுவதால் 30 அடி அகலமான வலைகள் இன்னமும் தேவைப்படுவதாக கூறி அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.
இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கருத்து கூறுகையில், 'மீனவ சங்கங்கள் விண்ணப்பப் படிவங்களில் கூறப்பட்டதின் அடிப்படையிலேயே வலைகள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
வடமராட்சி கிழக்குப் பகுதியிலுள்ள மற்றைய மீனவ சங்கங்கள் உபகரணங்களைப் பெற்றுச் சென்றுள்ள போதும், பத்திராயன் மீனவர் சங்கத்தினர் மாத்திரமே முரண்படுகின்றனர். மீனவர்களின் தேவைக்கேற்ற உபகரணங்களே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago