Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.
1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டது.
ஏப்ரல் மாத இறுதிப் பகுதிக்குள் மிகுதிக் காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய 2ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே - 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே - 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே - 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே - 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே - 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த காணிகளின் உரிமையாளர்கள் நாளை சனிக்கிழமை (11) காலை 9 மணிக்கு தங்களுடைய காணிகளை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், பதிவுகளை கிராம அலுவலர் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் மாவட்டச் செலயாளர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago