2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வடி சாராயம் வைத்திருந்தவருக்கு 15,000 ரூபாய் அபராதம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் வடி சாரயத்தினை வைத்திருந்த புங்குடுதீவு 1ஆம் வட்டாரப்பகுதியினை சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, ஊர்காவற்துறை பகுதியில் பொது இடத்தில் சூது விளையாடிய இருவரை தலா 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி நீதவான் உத்தரவிட்டார். 

மேற்படி இருவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் வியாழக்கிழமை (23) கைது செய்தனர். 

குறித்த இருவரையும் வெள்ளிக்கிழமை(24) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே தலா 500 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .