2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தொலைத்தொடர்பு வயர்களை நாசப்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொலைத்தொடர்பு வயர்களை மீண்டும் சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார்.

கரவெட்டி பிரதேச செயலகத்துக்;கு அருகில் இலங்கை தொலைத்தொடர்பு நிலையத்துக்கு சொந்தமான வயர்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், நெல்லியடி பொலிஸாரால் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மூவரும் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி, கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு அருகில் தொலைத் தொடர்பு வயர்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், கரவெட்டி இராஜ கிராமம் பகுதியினை சேர்ந்த மூவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து சந்தேக நபர்கள் மீதான வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இதேவேளை சந்தேக நபர்கள் சேதமாக்கியிருந்த தொலைத் தொடர்பு நிலையத்தின் வயர்கள் 1 இலட்சத்து 868 ரூபாய் என தொலைத் தொடர்பு அதிகாரிகள், நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .