2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவரின் சாரதி அனுமதி பத்திரம் 3 மாதத்துக்கு இரத்து

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சாரதி அனுமதிபத்திரம் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய, கொடிகாமம் கெற்பேலி பகுதியினை சேர்ந்த நபருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதித்த சாவகச்சேரி நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரன், குறித்த நபரின் சாரதி அனுமதி பத்திரத்தினை மூன்று மாத காலம் இரத்து செய்துள்ளார்.

அந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு இதன் போது கொடிகாமம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதி தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .