2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சேற்று நிலப்பகுதிக்குள் புதையுண்ட நிலையில் ஆயுதங்கள்

Sudharshini   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அல்லைப்பிட்டி அலுமனியம் தொழிற்சாலைச் சந்திப் பகுதியிலுள்ள சேற்று நிலப்பகுதிக்குள் ஆயுதங்கள் இருப்பதாக ஊர்காவற்றுறை பொலிஸார் சனிக்கிழமை (25) தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வீதி புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், வீதியின் அருகாமையிலுள்ள சேற்று நிலப்பகுதியில் ஆயுதங்கள் இருப்பதை கண்டு பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன் பொதுமக்கள் அங்கு செல்லாதவாறு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படி பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததென தெரிவித்த பொலிஸார் ஆயுதங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்; கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .