2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கணவன் மனைவியை தாக்கிவிட்டு நகைகள் கொள்ளை

George   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரணவாய், தெற்கு வெற்றிக்காடு பகுதியில்  சனிக்கிழமை(25) இரவு உட்புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த கணவன், மனைவியை தாக்கிவிட்டு, மனைவியிடம் இருந்த 4 ½ பவுண் நகை மற்றும் 36,000ரூபாய் பணத்தினை   கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டில் கணவனும் மனைவியும் தூங்கிய நேரம் பார்த்து, வீட்டு யன்னல் கம்பியினை வளைத்து நுழைந்த திருடர்கள், அலுமாரியில் இருந்த பணத்தினை திருடியுள்ளனர்.

இதன்போது, திருடர்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த கணவன் மற்றும் மனைவியை தாக்கிவிட்டு, கழுத்தில் இருந்த 2பவுண் சங்கிலி, 2பவுண் வளையல், மற்றும் ½ பவுண் மோதிரம் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .