Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு 20 வருடங்கள் கடந்துவிட்டன. அரங்கு பற்றிய தெளிவு இல்லாமையால் அதனை வளர்க்க முடியவில்ஐஷ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கா.சிதம்பரநாதன் தெரிவித்தார்.
அரங்கின் ஊடாக புதிய சிந்தனை மாற்றம் கொண்டு வரக்கூடியதாக இருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விளங்கிக் கொள்ளாமையினால் அந்த மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை என தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தின் நாடகவிழா 2015 நிகழ்வு மருத்துவ பீட கூவர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
நாடகம் என்னும் விடயம் அரங்கு என்கின்ற விடயமாக மாற்றமடைய வேண்டும். நாடகம் என்னும் போது இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகின்றது.
இந்த இலக்கியம் தனிமனிதனது முயற்சியாக இருக்கும். அரங்கு என்னும் போது சமூகத்தை குறிக்கும். சமூக அக்கறை பொருந்திய செயற்பாடு அரங்காக மிளிரும். இங்கு சமூக விடயங்கள் பேசப்படுகின்றன.
சமூகத்திலுள்ள மக்களது பாடுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற போது அரங்காக மாற்றம் பெறுகின்றது. சமூகம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்துகின்ற இடமாக இது அமையும்.
படிக்கின்ற போது குழப்படி விடவேண்டம் எனக் குறிப்பிடுவார்கள் குழப்படி என்பது படைப்பாக்கத்துடன் சம்பந்தப்பட்டது. அரங்கம் படைப்பாக்கத்தை கொண்டு வருகின்றது. புதிய சிந்தனைகளை கிளர்த்துகின்ற இடமாக அரங்கை மாற்ற வேண்டும்.
கலைஞர்கள் சமூக அக்கறை உடையவர்களாக விளங்குகின்றார்கள். சமூகம் பற்றிய பார்வை அவர்களிடம் காணப்படுகின்றது. சமூகம் பற்றி புதிய படிமங்கள் கொண்டு வருகின்றார்கள். சமூகம் பற்றிய காத்திரமான படிமங்களை கடந்த காலங்களில் பார்த்தோம்.
கூட்டாக சேர்ந்த ஆற்றுகையின் ஊடாக பார்வையாளர்களுக்கு மனதில் தாக்கக்கூடிய வன்மையான விடயத்தை கொடுக்க வேண்டும். நல்ல செயற்களை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago