2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வறுத்தலைவிளானில் 3 ஷெல்கள் மீட்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் வடக்கு வறுத்தலைவிளான் பகுதியிலுள்ள கண்ணகியம்மன் ஆலய கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (27) 3 ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர்.

25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்குப் பகுதியில் அண்மையில் 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கிணற்றை, துப்புரவு செய்யும் பணிகளை வலிகாமம் வடக்குப் பிரதேச சபை திங்கட்கிழமை (27) மேற்கொண்டது.

இதன்போது, கிணற்றுக்குள் 3 ஷெல்கள் இருப்பதை கண்ட பிரதேச சபை பணியாளர்கள் அதனை கிணற்றுக்கு வெளியில் கொண்டு வந்து, இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இராணுவத்தினருடன் அங்கு சென்ற பொலிஸார் ஷெல்லை மீட்டுச் சென்றனர்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .