2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'பெற்றோர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை பாரிய தவறுகள் செய்யத்தூண்டும்'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

தங்கள் பெற்றோரையே தமது முன்னுதாரணமாக நினைத்து குறிப்பிட்ட வயது வரை பிள்ளைகள் பின்பற்றுவார்கள். பெற்றோர்கள் விடும் சிறு தவறுகள் பிள்ளைகளை பாரிய தவறுகளைச் செய்யத் தூண்டுவதாக அமைந்துவிடும் என இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் பா.சத்தியன் தெரிவித்தார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன சாவகச்சேரிக் கிளையினரால் தமது கிளையில் அங்கத்தவர்களாக உள்ளவர்களது பிள்ளைகளில் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய 40 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பெற்றோர்கள் பிள்ளைகள் முன் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். சில பெற்றோர் பிள்ளைகளுடன் செல்லும் போதும் பாதசாரிக் கடவையால் பாதையைக் கடக்காது சில தூரத்தில் கடப்பார்கள். பொலிஸாரைக் கண்டால் மட்டும் பாதசாரிக் கடவையை பயன்படுத்துவார்கள். அது சில தூர வித்தியாசம் தானே என நாம் நினைக்கலாம். ஆனால் எமது பிள்ளைகள் அதனை முன் உதாரணமாகக் கொண்டு, அவர்களும் அப்படிக் கடக்க முயற்சிப்பார்கள்.

பல விடயங்கள் எமக்கு சின்ன விடயமாக தோன்றுவது பெரும் தவறுக்கு வித்திட்டுவிடலாம். நாம் சிறுவர்களாக இருந்தபோது இருந்த அறிவைவிட தற்போதுள்ள பிள்ளைகள் அறிவிலும் புத்திக்கூர்மையிலும் சிறந்தவர்களாகக் காணப்படுகிறார்கள்.

அவர்களது அறிவை ஆக்கபூர்வமான பாதையில் கொண்டு செல்லும்போது நல்ல விளைவுகளை நாமும் நாடும் அடையலாம். அதற்கான வழிவகைகளை பெற்றோரும் கல்விச் சமூகத்தினரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .