2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்கான செயலமர்வு

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சால் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவுக்கு புதிய பயனாளிகளை இணைப்பது தொடர்பாகவும் அத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான செயலமர்வு, கரைச்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.

இதில் சமூக சேவைகள் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எஸ்.ராமமூர்த்தி வளவாளராகக் கலந்துகொண்டார்.

வடமாகாணத்தின் 34 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூக சேவைகள் அலுவலர்களும், திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் பிரிவுகளைச் சேர்ந்த 7 பிரதேச செயலகப் பிரிவு சமூக சேவைகள் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .