2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கூட்டுறவு மேதினம்

George   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவு தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து இம்முறை மே தினத்தைக் கூட்டுறவு மேதினமாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடவுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி கூட்டுறவாளர்களின் மே தின எழுச்சிப் பேரணி நடைபெறும் எனவும், 4.30 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மே தின நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .