2025 ஜூலை 12, சனிக்கிழமை

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வரணி, இடைக்குறிச்சி பகுதி வயல் குளத்தில் வீழ்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (28)இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என்.பண்டார தெரிவித்தார்.

அதேயிடத்தைச் சேர்ந்த மகேந்திரன் விதுஷன் (வயது 08) என்ற சிறுவனே உயிரிழந்தான். மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அருகிலுள்ள குளத்தில் சிறுவன் குளித்துக்கொண்டிருந்த போது, சேற்றில் சிக்குண்டு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்  சடலம் ஒப்படைக்கப்பட்டதாக பொறுப்பதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .