2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இடம்பெறும் வாள்வெட்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டத்தில் தற்போது பரவலாக தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த எதிர்வரும் 5ஆம் திகதி விசேட சிவில் சமூக கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையடலில் எடுக்கப்படும் முடிவுகளின்படி வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய விரும்புபவர்கள் யாழ். மவாட்ட செயலகத்தின் ஊடாக செய்யலாம். அவ்வாறு செய்யப்படும் உதவிகள் மத்திய அரசின் மூலம் நேபாளத்திற்கு அனுப்பப்படும் என  அவர் இதன்போது தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .