2025 ஜூலை 12, சனிக்கிழமை

அனைத்து உழைப்பாளிகளும் ஐக்கியத்துடன் ஒன்றிணைய வேண்டும்: கே.வி.குகேந்திரன்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான தொழிலாளர் சுதந்திரத்துக்கும் அதனூடாக செழிப்புமிக்க உழைப்புகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க இந்த தொழிலாளர் தினத்தன்று அனைத்து உழைப்பாளிகளும் ஒருமித்த கருத்துடன் ஐக்கியமாக ஒன்றிணைய வேண்டும்; என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

மே தினம் தொடர்பில் அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாளாந்தம் உழைத்து ஓடாய் தேய்ந்து முதலாளி வர்க்கத்தை உயர்த்திவிட்ட தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை செய்யும் உரிமத்தை பெற்றுக்கொண்டு இன்றுடன் 129 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன.
அடிமைத்தனத்திலிருந்த தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி பெற்றுக்கொண்ட இந்த உரிமத்தை இன்றும் பல உழைப்பாளிகள் முறையாய் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவில்லை என்பதே வேதனையான விடயமாகும்.

சகல முதலாளிகளும் தமது முதலீடுகளை பெருக்கித்தரும் தொழிலாளிகளை கரந்தூக்கி விடுவார்களானால் உலகில் வறுமையும் வன்முறைகளும் வேண்டா உயிரிழப்புகளும் அற்ற தேசமொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.

அதற்கான அடித்தளத்தை இடும் நாளாக இந்நாளை ஒவ்வொரு முதலாளி வர்க்கத்தினரும் பாடுபட வேண்டும் என்பதே இன்றய நாளின் முதன்மைப்பொருளாக இருக்கவேண்டும்.

உங்கள் ஒவ்வொருவரது ஒன்றுபட்ட கரங்கள் சொல்லும் பாதையூடாகத்தான் எதிர்கால உலகத்தின் வெற்றிக்கான பயணம் தொடங்குகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காக உழைக்கும் உங்களை இந்த உலகம் நன்றியுடன் பார்க்கவேண்டியது காலத்தின் தேவையாகும். எமது நாட்டை பொறுத்தவரையில் கடந்து சென்ற 30 வருடங்கள் கடுமையான பாடங்களை வாழும் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றுள்ளது.
 
அந்த ஆண்டுகள் கற்றுத்தந்த பாடங்கள் இனிவரும் ஆண்டுகளில் உழைப்பாளிகளின் விடியலுக்கான படிகளாக இருக்கவேண்டும்  அதற்காக உலகப்பந்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் இனமத பேதங்களை மறந்து ஐக்கியத்துடன் உரத்து குரலில் ஒலிக்கச் செய்யவேண்டும் இந்த தொழிலாளர் தினத்தின் உன்னத மகத்துவத்தை.

உதிக்கின்ற சிந்தனைகளுக்கெல்லாம் உருக்கொடுக்கும் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் அவர்களது உரிமைக்கும் ஒருதரம் குரல்கொடுப்போம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .