2025 ஜூலை 12, சனிக்கிழமை

"வாள்வெட்டுக்களை கட்டுப்படுத்த, முதலமைச்சர் அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்"

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் தனக்கு கீழுள்ள அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியதாகவும், அது தொடர்பில் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.
 
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட தவராசா, முதலமைச்சர் தனக்கு கீழுள்ள சிறு அதிகாரங்களை இதற்கு பயன்படுத்தலாம். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரை அழைத்து, ஒரு குழுவை அமைத்து இது தொடர்பில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .