2025 ஜூலை 12, சனிக்கிழமை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுகூரும் நிகழ்வு

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உலக பத்திரிகை தினத்தையொட்டி கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் நிகழ்வு, யாழ்.பொது நூலகத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்திய இந்நிகழ்வானது 'மிகப்பெரும் ஊடகப் படுகொலை தினம்' என்ற கருத்தில் நடைபெற்றது.

கடந்த கால துன்பங்களை தாங்கிய ஊடக கண்காட்சி இடம்பெற்றதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் திருவுருவப் படங்களுக்கு ஈகைசுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தலைவர் ஆ.இராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .