2025 ஜூலை 12, சனிக்கிழமை

வலிகாமம் வடக்கு ஆயுர்வேத பாதுகாப்புச் சபை தலைவர் நியமனம்

Gavitha   / 2015 மே 03 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் தலைவராக வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் வரதலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

வலிகாமம் வடக்கு ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் புதிய நிர்வாகத் தெரிவு கூட்டம் கடந்த 30ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்திய கலாநிதி என்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகத்தில் செயலாளராக வைத்திய கலாநிதி திருமதி உமா மயூரதன், பொருலாளராக வைத்திய கலாநிதி இ.தவரட்ணராசா, உபதலைவராக வைத்திய கலாநிதி எஸ்.சுப்பையா, உபசெயலாளராக வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீநாககௌரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக வைத்திய கலாநிதிகள் ஈ.சுந்தரேஸ்வரன், என்.ஈஸ்வரன் என்.சக்திவேல், ரி.சோமசுந்தரம், திருமதி த.தங்கரட்ணம், வி.தனக்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .