Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 20 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை தப்பிக்க வைக்க முயற்சித்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு கொழும்பு பிரபல சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறனின் கொடும்பாவி, கிளிநொச்சி பளைப் பகுதியில் புதன்கிழமை (20) எரிக்கப்பட்டது.
பளை பிரதேச விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பளை பொது விளையாட்டு மைதானத்திலிருந்து மத்திய பேரூந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக சட்டத்தரணி வீ.டி.தமிழ்மாறனின் கொடும்பாவியை இழுத்துச் சென்று, அங்கு கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புபட்ட 8 சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய சுவிஸ் நாட்டுப் பிரஜையை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்நபர் மீது எவரும் வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் அவரை பொலிஸார் விடுவித்த நிலையில், மேற்படி சட்டத்தரணி, சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை கொழும்புக்கு கூட்டிச் சென்று சுவிஸுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதனை அறிந்த மக்கள் சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறன், செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு வந்திருந்த வேளை அவரை தடுத்து வைத்துப் போராட்டம் செய்தனர். மக்களின் போராட்டத்தால் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலையாளிகளுக்கு சார்பாகச் செயற்படுகின்றார் என சட்டத்தரணியின் கொடும்பாவி பளையில் எரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
9 hours ago