2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொது இடத்தில் கலகம் விளைவித்த 9 பேர் கைது

Sudharshini   / 2015 மே 25 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு வீPதியில் சண்டையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைத்த 9 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேரும் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .